நெடுந்தீவில் உள்ள குதிரைகளுக்கு குறி சூடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நெடுந்தீவில் உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கள் இன்றி குதிரைகள் இறந்து வருகின்றன. அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை வனஜீவராசி திணைக்களத்தின் முன்னெடுத்துள்ளனர்.
அங்குள்ள குதிரைகளுக்கு அப்பகுதியில் வசிக்கும் சிலர் குறி சுட்டு குதிரைகளை உரிமை கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு குறி சுடும் போது குதிரை குட்டிகளுக்கும் குறி சுடுகின்றனர்.
அது தொடர்பில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தாம் கவனம் செலுத்தி , குறி சுடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்து உள்ளதாகவும் , குறி சுடும் நபர்களின் குற்றங்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படும் ஆயின் 40 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரையில் நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #குதிரை #சட்டநடவடிக்கை #வனஜீவராசி_திணைக்கள_அதிகாரிகள் #நெடுந்தீவு