Home இலங்கைமின்சாரம் தாக்கியதில் 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர் வைத்தியசாலையில்!

மின்சாரம் தாக்கியதில் 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர் வைத்தியசாலையில்!

by admin

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தவர் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கலைச்செல்வன் (வயது 27) என்பவரே காயமடைந்துள்ளார். 
சாவகச்சேரி நகர் பகுதியில் கடை தொகுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.

நேற்றைய தினம் திங்கட்கிழமை கட்டடத்தின் நாலாம் மாடியில் கட்டுமான பணிகளுக்காக சாரம் (ஏறி நின்று வேலை செய்வதற்காக கட்டப்படுவது) கட்டும் போது இரும்பு கம்பி அருகில் சென்ற மின் கம்பியில் தொடுகை உள்ளதால் மின்சாரம் தாக்கியுள்ளது. 


அதனால் அவர் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். கீழே தூக்கி வீசப்பட்டதில் தலையில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.  #மின்சாரம் #வைத்தியசாலை #சாவகச்சேரி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More