Home இந்தியாசிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது

சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது

by admin

சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் 

ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு

கலைமாமணி விருது பெறும் நடிகைகள்
பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி , நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா

கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்
இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ,பாடகர்கள் சுஜாதா, அனந்து


கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள் 
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ்

கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள் 
கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா


கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள் 
நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா

இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #சிவகார்த்திகேயன் #யோகிபாபு #ஐஸ்வர்யாராஜேஷ் #கலைமாமணிவிருது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More