153
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமல் வீரவன்சவை ஜனாதிபதி சந்தித்து பேசியபோதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தான் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் எனவும் எனவே, வேறு அமைப்புகளுக்கோ அல்லது பதவிகளுக்கோ தலைமை தாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love