இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல்துறைப்பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #சுன்னாகம் #இராணுவத்தினரின் #தாக்குதலுக்கு #இளைஞன் #வைத்தியசாலை #உடுவில்