Home இலங்கைமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு

முதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு

by admin

திருகோணமலை-சம்பூர் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவா் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28)  மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான கோணலிங்கம்  லேனுஜன் எனும் சிறுவனே இவ்வாறு நடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

இத்திகுளம் குளத்தில் மேலும் இரு சிறுவர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அவரது வீட்டுக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு ஓடிச் சென்ற சிறுவனின் தந்தை, தனது மகனை முதலை  இழுத்துச் சென்றதை அவதானித்ததாக காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முதல் காணாமல்போயிருந்த இச்சிறுவன், முதலை கடித்த நிலையில் கிராம மக்களின் உதவியுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. #திருகோணமலை #சம்பூர் #முதலை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More