Home சினிமாதலைவர் பதவியிலிருந்து விலகிய தீபிகா படுகோன்

தலைவர் பதவியிலிருந்து விலகிய தீபிகா படுகோன்

by admin

பொலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளாா்.

முன்னா் ஆமிர் கானின் மனைவி கிரண் ராவ் ஜியோ எம்ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவராக பதவி வகித்திருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தீபிகா படுகோன் அப்பதவியிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் நேற்று ஏஎம்ஐ மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியிருச்து தீபிகா படுகோன் விலகியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

எம்ஏஎம்ஐ தலைவராக பணியாற்றியது மிகவும் அற்புதமான ஒரு அனுபவம். ஒரு நடிகையாக சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களையும் எனது இரண்டாவது வீடான மும்பையின் ஒன்றிணைப்பது ஒரு ஆரோகியமான உணர்வு.

ஆனால் தற்போதைய பணிச்சூழலில் என்னால் எம்ஏஎம்ஐ தலைவர் பதவிக்கு தேவையான அர்ப்பணிப்பையும், கவனத்தையும் கொடுக்க இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே அப்பதவி சிறந்த கைகளில் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு இதிலிருந்து விலகுகிறேன் என தீபிகா கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More