Home இலங்கைகொழும்பு துறைமுக நகரம் குறித்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்!

கொழும்பு துறைமுக நகரம் குறித்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமனம்!

by admin


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்வதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், உயர் நீதிமன்றத்தினால் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More