Home இலங்கைசுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறி,  சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது எதிரிகள் சார்பில் மன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையானர். இதனையடுத்து யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன தொடரனிக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More