முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையினைக் கவனத்தில் கொண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என என திருத்திய கட்டளையை வெளியிட்டு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்துடன், இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.