149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நபரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த வீ.விஜயன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொலை சதி முயற்சி தொடர்பில் சந்தேக நபர்களின் செல்லிடப் பேசிகளை விசாரணைக்கு உட்படுத்த அனுமதியளிக்குமாறு பயங்கரவாத தடைப் பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.
Spread the love