Home இலங்கைபயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை

பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு ஆலோசனை

by admin

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வரும்வரையில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்களின் சங்கம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனாத் தொற்று நாட்டில் அதிகரிக்குமாக இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்குமெனச் சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ, இதனால் சுகாதாரப் பிரிவு வீழ்ச்சியடையும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு அனைவரும் பொது இலக்கின் கீழ் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More