மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறிச் சென்றவா்களால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன், இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை தலைமையக காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 22 வயதான சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்த இளைஞன் நோய் காரணமாக இறந்துவிட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவா் தாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனா்.