Home இலங்கைஅல்லைப்பிட்டியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் விடுதியுடன் தனிமைப்படுத்தல்

அல்லைப்பிட்டியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் விடுதியுடன் தனிமைப்படுத்தல்

by admin

அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர். அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை காவல்துறையினருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More