Home இலங்கைவடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!

by admin

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் இன்றுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர். இது 62.09 சதவீதமாகும்.

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 67.54 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் முறையே 3,4,5ஆம் இடங்களில் உள்ளன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More