Home இலங்கைஆலய சூழலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு – வீதியில் அமர்ந்த பக்தர்கள்

ஆலய சூழலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு – வீதியில் அமர்ந்த பக்தர்கள்

by admin

நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் காண வந்த அடியவர்களை ஆலய வளாகத்தினுள் அனுமதிக்க காவல்துறையினர் தடை விதித்தமையால் ,காவல்துறையினருக்கும் அடியவர்களுக்கும் இடையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. 


நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  கொடியேற்றத்தினை நேரில் காண்பதற்காக பலர் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களை ஆலய சூழலுக்குள் காவல்துறையினா் அனுமதிக்கவில்லை.

 
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது. அத்துடன் ஆலய நிர்வாகம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 


அதேவேளை யாழ். மாநகர சபை , சுகாதார பிரிவு என பல தரப்பினராலும் , ஆலய சூழலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையிலையே குறித்த அறிவித்தல்களை செவி சாய்க்காத பலர் ஆலய கொடியேற்றத்தினை நேரில் காணப்பதற்காக வந்திருந்த நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்க வில்லை. இதனால் கொடியேற்றம் முடியும் வரையில் பக்தர்கள் வீதிகளில் அமர்ந்திருந்து விட்டு திரும்பி சென்றனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More