கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (20.08.21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள்
பொலிஸ் நிலையங்கள்
கிராம அலுவலகர்கள்
அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள்
உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்)
நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை ,கட்டுமானப் பணி)
விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது)