Home இலங்கைஹெரோயினுடன், வெளிநாட்டுக் கப்பல் சுற்றிவளைப்பு!

ஹெரோயினுடன், வெளிநாட்டுக் கப்பல் சுற்றிவளைப்பு!

by admin

ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்திச் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதாகவும், நேற்றிரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவற்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தெற்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் காவற்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More