Home இலங்கைகுளப்பிட்டி விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதம் – மூவர் உயிர்தப்பினர்

குளப்பிட்டி விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதம் – மூவர் உயிர்தப்பினர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது. அதில் பயணித்த கர்ப்பிணி பெண் உட்பட  மூவர் தெய்வீகதனமாக காயங்களின்றி  தப்பி உள்ளனர். குளப்பிட்டி சந்தியில் இன்று மாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

யாழில் இருந்து காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது.  அதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஹயஸ் வாகனம் திரும்பும் வரையில் வீதியில் தரிந்து நின்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் மிக வேகமாக வந்த படிரக வாகனம் தரித்து நின்ற முச்சக்கர வண்டியை மோதி தள்ளியது.

அதனால் நிலை தடுமாறிய முச்சக்கர வண்டி ஹயஸ் வாகனத்துடன் மோதி மீண்டும் நிலை தடுமாறி எதிரே வந்த ஹன்ரர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்து உள்ளது.

அதன் போது முச்சக்கர வண்டியினுள் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட மூவர் இருந்த போதிலும் மூவரும் காயங்களின்றி தப்பியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More