அதிக ஆபத்துள்ள COVID மரபணு தெற்காசிய நாடுகளில் அதிகமாக காணப்படுவதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரேனா பெருந்தொற்றினால் நுரையீரல் செயலிழப்பு மற்றும் இறப்பு வீதத்தை இரட்டிப்பாக்கும் மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகளின் ஆய்வின் பிரகாரம், தெற்காசியாவில் 60 வீதமானோரும் ஐரோப்பாவை சேர்ந்த 15 வீதமானோரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தடுப்பூசிகள் இந்த அபாயத்தை கணிசமாகக் குறைக்க உதவுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பிரித்தானியா மற்றும் தெற்காசிய மக்கள் COVID தொற்றினால் அதிக ஆபத்தை ஏன் எதிர்கொள்கின்றனர் என்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், அது குறித்து முழுமையான விளக்கங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை.
குறித்த ஆபத்தான மரபணு அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.