Home உலகம்மணிலாவின் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மணிலாவின் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

by admin


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு  ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வரும் நிலை  தோன்றியுள்ளதாகவும்  இந்த விபத்தினால் ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More