Home இலங்கைகடந்த அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது – TNA

கடந்த அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது – TNA

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது.

பாராளுமன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More