குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரியாலை புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்.போதனா வைத்திய சாலையில் உயிரிழந்து உள்ளார். அரியாலை நெடுங்குளம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற நகர் கடுகதி சேவை புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் இராணுவ வாகன சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மற்றைய இராணுவ சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்த இரண்டு இராணுவ சிப்பாய்களும் தமது உயர் அதிகாரியின் வாகனத்தை சுத்திகரிப்பு செய்வதற்காக வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும், அதன் போது வாகனத்தினுள் பாட்டினை சத்தமாக ஒலிக்க விட்டவாறு வந்து கொண்டிருந்தால் புகையிரதம் வருவதற்கான சமிக்சை ஒலி எழுப்பபட்டதை அவதானிக்காது புகையிர கடவையை கடக்க முற்பட்ட வேளையே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யாழ் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ சாரதி உயிரிழந்துள்ளார்
Feb 9, 2017 @ 10:51
யாழ் அரியாலை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இராணுவ சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரியாலை நெடுங்குளம் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் இராணுவ வாகனம் கடவையை கடக்க முயன்ற போது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற நகர கடுகதி சேவை புகையிரத்துடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.