அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியதனால் சுமாா் 100 போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு கவுண்டிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ள அம்மாகாண ஆளுனர் அன்டி பெஷீர் (Andy Beshear) கென்டகி பகுதியில் சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமாா் 100 உயர்ந்துள்ளதாக தொிவித்துள்ளாா். . மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த சக்திவாய்ந்த சூறாவளி தாக்குதல்களால் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது