Home இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியர் பிரபஞ்ச அழகியானார்!

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியர் பிரபஞ்ச அழகியானார்!

by admin

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் இடம்பெற்ற “மிஸ் யுனிவர்ஸ்”  போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண்ணான ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் “மிஸ் யுனிவர்ஸ்” பட்டத்திற்காக பங்கேற்றனர்.

அவருக்கு முன்னதாக பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த அண்ட்ரியா மெசா வாகையை சூட்டியிருந்தார்.

ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு “மிஸ் சண்டிகாராக” தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More