162
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு சிரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love