ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் – கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
அத்தோடு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.