165
Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading
இந்தியாவின் ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.2 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு ஏற்பட்டதாகவும் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில்; 5.8 அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love