Home உலகம்வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை

வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை

by admin

 ஹொலிவூட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு ஒஸ்கார் அகாடமி குழு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. வில் ஸ்மித் , ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக்கை மேடையில்  வைத்து அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பாாிய அதிா்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்திற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஒஸ்கார் அமைப்பு (Academy of Motion Picture Arts and Sciences) கடந்த   வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பின்னா் அங்கேயே கிறிஸ் ரொக்கிடமும் ஒஸ்கார் அகாடமியிடமும் வில் ஸ்மித் மன்னிப்புக் கோரியிருந்ததுடன் அகாடமியிலிருந்தும் தானாக முன் வந்து விலகியிருந்தாா்.

எனினும் சம்பவம் நடந்த அன்றறிரவே கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More