Home இலங்கைகளத்தில் ரணில் – கொழும்பு அரசியலில் மாற்றமா?

களத்தில் ரணில் – கொழும்பு அரசியலில் மாற்றமா?

by admin

கொழும்பு அரசியலில் இன்றிரவு பாரிய மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்துடன் இணைத்து அந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தால் அதி முக்கிய பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்றும தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், தன்னுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஐவரடங்கிய குழுவை தேசிய பட்டியலின் ஊடாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க நிபந்தனை வித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை முழ்கும் அரசாங்கத்தில் பதவி எதனையும் தான் எடுக்கத் தயார் இல்லை என முன்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறி்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More