314
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தன சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துள்ளாா். ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதனையடுத்தே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.
நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love