Home இலங்கைகாரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

by admin

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்ட மீனவர்களில் ஆறு பேர் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 
அதனை அடுத்து நீதவான் 06 மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More