தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான . பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 70.
1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவா் 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப்படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இளைமைக்கோலம், மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் போன்ற தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நெருக்கமானார்.
வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.
பிரதாப்போத்தன் சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் இன்று (15.07.2022) காலை சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது