யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 40 கிலோ பூசணிக்காய் களவாடப்பட்டிருந்தது.
அது தொடர்பில் தோட்டக்காரரால் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , வட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள மூளாய் பகுதியில் நபர் ஒருவர் 40 கிலோ பூசணிக்காயை கிலோ 70 ரூபாய் வீதம் விற்பனை செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , பூசணிக்காயை விற்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம்காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்/.