296
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நவராத்திரி விழாவின் இறுதி நாள் விழாவான மானம்பூ திருவிழா நேற்றைய தினம் புதன் கிழமை(5) மாலை ஆரம்பமானது.
மாலை 5.30 மணிக்கு திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இருந்து சுவாமி அழங்கரிக்கப்பட்ட ஊர்தியில் எழுந்தருளி வேட்டையார் முறிப்பு ஆலயத்தில் வாழை வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமியின் வீதி உலா இடம் பெற்றது.தொடர்ந்து கிராமங்களில் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு,கிராமங்கள் ஊடாக மீண்டும் திருக்கேதீஸ்வர ஆலயத்தை சென்றடைந்தது.
அதனை தொடர்ந்து கேதார கௌரி விரத பூஜை ஆரம்பமாகியது. தொடர்ந்து எதிர்வரும் 21 நாட்கள் கேதார கௌரி விரத பூஜை இடம்பெறும்
Spread the love