211
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Spread the love