Home இலங்கைபளையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு -4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

பளையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு -4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

by admin
கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More