160
வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சபையில் பிரேரணையை முன் மொழிந்துள்ளார்.
வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார்.
வடமாகாணத்தில் 4000 ஆசிரியர் வெற்றிடம் உள்ளது அவற்றுக்கு அழகியல் பட்டதாரிகள் மற்றும் கலைப்பட்டதாரிகளை ஆரம்ப கல்வி ஆசிரியர்களாக நிபந்தனையுடன் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்வி அமைச்சரை இச் சபை கோருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
Spread the love