மூன்று தசாப்தங்களாக நிலவிய விடுதலை புலிகளுடனான போரை தோல்வியடைய செய்த யுத்த வெற்றியின் கௌரவம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்க வேண்டும் என கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு சரத் பொன்சேகாவின் கருத்திற்கு பதிலளித்த கருணா, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பொன்சேகா இராணுவத்தில் கடமையாற்றினார் எனவும் அந்த காலத்திலேயே புலிகளை அழிப்பதற்கு பொன்சேகாவுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக்காலப்பகுதியில் தானும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் எனினும் அந்தக் காலப்பகுதியினுள் பொன்சேகாவினால் புலிகளை அழிக்கும் அளவிற்கு எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்