232
திருமணமாகி இரண்டே மாதங்களான, தெல்லிப்பழையைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பாலசுப்பிரமணியம் சயந்தன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரும், அவரது சகோதரனும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்று, அங்கிருந்து திரும்பி வரும் வேளையில் மட்டுவில் கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானார்கள்.
விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love