நாளை செவ்வாயக்கிழமை (28) வானில் ஒரு அதிசயம் நிகழப் போவதாக விஞ்ஞானிகள் தொிவித்துள்ளனா். அதாவது செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன.
இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளை செவ்வாய்க்கிழமை) இந்த கிரக வரிசையைக் காண முடியும். அவ்வாறு காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னா் மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் தொிவித்துள்ளாா்.
. இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்’ தவறிவிடும். எனத் தொிவித்துள்ளனா். , சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என விஞ்ஞானிகள். தொிவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றிய நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் நடைபெற்றிருந்ஹதமை குறிப்பிடத்தக்கது