200
சொகுசுக்காரில் 18 கிலோ கேரளா கஞ்சாவை கடத்தி சென்ற இளைஞனை இராணுவத்தினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி இடைக்காடு பகுதியில் இருந்து சுன்னாகம் பகுதிக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இடைக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த சொகுசு காரினை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கையின் போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 18 கிலோ கஞ்சா போதை பொருளை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதனை அடுத்து காரினை ஓட்டி வந்த இளைஞனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் , காரினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.
Spread the love