197
வியட்நாம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக சென்று கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை (19) 23 பேர் இலங்கையைச் சென்றடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 நவம்பா் மாதம் 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாமியக் கொடியுடனான பெரிய படகு வியட்நாம் கடற்பரப்பில் கவிழ்ந்திருந்தது.
வியட்நாமிய கடலோர பாதுகாப்பு படையினர் விபத்துக்கு உள்ளானவா்களை மீட்டதுடன் டிசம்பா் மாதம் அவர்களில் 151 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love