292
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 மாடி கட்டடத்திலிருந்து பலர் மீட்கப்பட்ட போதிலும், மேலும் பலருக்கு என்ன ஆனது என தெரியாதுள்ளதாக நியூஸிலாந்து காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்தநிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் காயமடைந்த மேலும் சிலர் உயிரிழக்கக்கூடுமென நியூஸிலாந்து பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
Spread the love