306
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை என்பது திருப்திகரமானதாக அமையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு அம்பாறை இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்வின் 14 ஆவது நிறைவினை அனுஸ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்
அரசாங்கம் கையாள்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் பொதுமக்களாகிய நீங்கள் அவதானிக்க வேண்டும்.1983 ஆண்டு எமது இனம் நாடு பூராகவும் அழிக்கப்பட்ட பின்னர் 2009 ஆண்டு மீண்டும் மிக மோசமாக அழிக்கப்பட்டது.இவ்வாறான விடயங்களை எமது இளைய சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதிர்காலத்தில் எமது இனம் எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றோம்.இந்த நாட்டின் தலைவர்கள் எந்தவித இதய சுத்தியின்றி எம்மை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
குறித்த நிகழ்வின் போது நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றது.பின்னர் பூசையை தொடர்ந்து நினைவுச்சுடர் மாவீரர் குடும்பம் சார்பாக இரு தாய்மார் ஏற்றினர்.அத்துடன் 1 நிமிடம் மௌன அஞ்சலியுடன் ஏனையோர் சுடர் ஏற்றினர்.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love
1 comment
1. பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை:
a. காணி அபகரிப்பு, பௌத்த விகாரைகள் அமைத்தல், சிங்களவர்களைக் குடியேற்றுதல், படையினர் முகாமிட்டுள்ள காணிகளை மீளக் கையளித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்குதல், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தல், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தும் தேதியை அறிவித்தல், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து வழங்குதல், மற்றும் அதிகாரத்தைப் பகிர்தல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
1. ரணில் கூறியது:
a. 2015 இல் பிரதமராக இருந்தபோது அரசியல் யாப்பில் இனப்பிரச்சனைக்கான தீர்வு வழங்குவேன் என்று கூறினார்.
b. சுதந்திர தினத்திற்கு (04.02.23) முன்னர் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவேன் என 2022 கார்த்திகை மாதம் கூறினார்.
c. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடன்பாடு 2023 இல் எட்டப்படும் என வைகாசி (01.05.23) நிகழ்வில் கூறினார்.
2. ரணில் செய்தது:
a. 2004 இல் ஆயுதப்போராட்டத்தை அழிக்க வித்திட்ட ரணில், 2015 இல் தமிழ் தேசிய நீக்க அரசியலுக்கு அடித்தளம் இட்டார்.
b. 11.05.23 இல் புதிதாக காணிகளை ஆக்கிரமிப்பதை உடன் நிறுத்துமாறு உத்தரவிட்ட பின்பு, 18 ஆம் திகதி உருத்திரபுரம் சிவாலயத்தின் காணியை அளவீடு செய்வதற்கான கடிதங்களை ஆலய நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.
3. சம்பந்தன் கூறியது (11.05.23):
a. அரசின் செயற்பாடுகள் மந்தகதியில் மட்டுமல்ல துப்பரவாக எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே அரசால் வழங்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை. அதுதான் உண்மை.
4. தவராசா கலையரசன் கூறியது:
a. “1983 ஆண்டு எமது இனம் நாடு பூராகவும் அழிக்கப்பட்ட பின்னர் 2009 ஆண்டு மீண்டும் மிக மோசமாக அழிக்கப்பட்டது. இந்த நாட்டின் தலைவர்கள் எந்தவித இதய சுத்தியின்றி எம்மை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்”.
5. தமிழர்கள் செய்ய வேண்டியது:
a. கடந்த 100 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழர்களை வஞ்சித்த வழிகளை பட்டியலிட்டு, தமிழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவர்களுக்கு அரசியல் விருப்பம் இல்லை என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.
b. சிவ பூமியாகிய இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்றும் வேலையை இலங்கை அரசாங்கம் செய்கின்றது. தமிழ் இன அழிப்பையே இலங்கை அரசாங்கம் தீர்வாக எண்ணி செயல் படுகின்றது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.
c. எங்கு இனஅழிப்பு நடக்கின்றதோ அங்கு தலையிட்டு, இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 152 நாடுகளும் தலையீடு செய்து தமிழின அழிப்பை நிறுத்தக் கடமைப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் உதவியுடன் வாக்கெடுப்பு நடத்தி பாதுகாப்புடன் கூடிய சுய ஆட்சியை அமைக்க தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
d. ஒரு விடுதலைக்காக போராடிய தமிழ் இனம் அந்த விடுதலையை பெறும் வரை அதை அடையும் திட்டங்களை முன்நிறுத்தி செயல்பட வேண்டும். இதை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்வார்களா?