620
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று(7) அவா் கொழும்பில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்ப்டிருந்தாா்
கைது செய்யப்பட்ட அவா் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (07) மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. .
Spread the love