உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா அணி 469 ஓட்டங்களை எடுத்ததனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 2வது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ஓட்டங்களை எடுத்த நிலையில் டிக்கிளயர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை என்பதனால் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து. இறுதியில் 2-வது இன்னிங்சில் 234 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா 209 ஓட்டஙகள் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியது. இந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணி படைத்துள்ளது.
ஐசிசி நடத்தி வருகின் ற 50 ஓவர் உலக கிண்ணம், இருபதுக்கு 20 உலக கிண்ணம் , சம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய ச 4 விதமான தொடர்களிலும் சம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா படைத்துள்ளது.