168
2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடு 26.02.2017 அன்று ஹட்டன் கிருஸ்ணபவான் கலாசார மண்டபத்தில் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள நடைபெற்றுது. இதன் போது புதிய பதவி நிலையாளர்கள் நியமிக்கபட்டார்கள் இவர்களில்
01. தலைவர் :- .வே.இராதாகிருஸ்ணன்
கல்வி இராஜாங்க அமைச்சர்
02. அரசியற்துறைத்தலைவர் :- அ.அரவிந்தகுமார் பா.உ – பதுளை
03. செயலாளர் நாயகம் :- அ.லோறன்ஸ்
04. சிரேஸ்ட உபதலைவர் :- சரத் அத்துக்கோரள
05. நிதிச்செயலாளர் :- எஸ்.விஜயசந்திரன்
06.தேசிய அமைப்பாளர்:-ஆர்.இராஜாராம்
07. பிரச்சார செயலாளர் : எஸ்.இரவீந்திரன்
08. பிரதிச் செயலாளர் நாயகம்:- செல்வி அனுசா சந்திரசேகரன்
09. உபதலைவர் கள் :- 01. ரூபன் பெருமான்
02. எஸ்.பத்மநாதன்
03. வி.மயில்வாகணம்
04. ; என்.பாலமுரளி
05. திலகேஸ்வரன்
10. உப செயலாளர்கள் 01. அ. சௌந்தரராஜன்
02. எஸ்.பத்மநாதன்
03 ஏ.ஜெகநாதன்
அணி அமைப்புகளின்; செயலாளர்கள்
01. ஆர்.இரவிந்திரன் :- செயலாளர்¸ ஆசிரியர் முன்னணி
02. திருமதி சுவர்ணலதா :- செயலாளர்¸ மகளிர் முன்னணி
03. டி.சுதாகரன் :- செயலாளர்¸ இளைஞர் முன்னணி
04.எஸ்.நல்லமுத்து :-செயலாளர்¸ கலாச்சார முன்னணி.
05. திருமதி கல்லாணி திலகேஸ்வரன்:- உபதலைவி;¸ மகளிர் முன்னணி
06. கே.சர்மிளா தேவி :- உபதலைவி¸ மகளிர் முன்னணி
மலையக மக்கள் முன்னணியின் உருவாக்கும் அதன் தற்போதய செயற்பாடுகள்
இந்த மாநாடு தொடர்பில் செயாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தனது அறிக்கையினை சபையில் முன் வைக்கையில் இந்த மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் மறைந்த செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் அவர்களின் மறைவின் பின் நான்காவது செயலாளராக நான் தெரிவு செய்யபட்டுள்ளேன் மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெறுவதற்கு பின்புலமாக அன்று இலங்கையிலும்¸ சர்வதேச நாடுகளிலும் காணப்பட்ட அரசியல்¸ பொருளாதார¸ சமூக சு10ழல் ஒரு தாக்கத்தை உண்டுபன்னியது. 1964ம் ஆண்டு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு¸ ஆட்டு மந்தைகள் போல் ஏற்றுமதி செய்யப்பட்டு¸ அதன் விளைவாக மக்கள் 80 களின் பின் இந்தியா செல்வதில் மலையக தமிழ் மக்கள் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்று¸ மலையக மக்கள் தமது தனித்துவத்திலும்¸ உயிர் பாதுகாப்பிலும்; கவனம் செலுத்திய காலகட்டமிது.
வட கிழக்கில் தமிழ் மக்கள் தமக்கெதிரான¸ இன அடக்கு முறைக்கு எதிராக¸ ஆயுதப் போராட்டத்தை தொடங்கி¸ அதனை கொண்டு நடத்திய காலகட்டமது. இதன் போது மலையக தமிழ் மக்களினதும் பாதுகாப்பிற்கு அச்சுருத்தல்; ஏற்பட்டது. 1989ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினது ஆயுத போராட்டமும் அதன் விளைவாக பச்சைப் புலி பயப்பிராந்தியமும் நாடு முழுதும் காணப்பட்டது. ஆகவே இவ்விதமான பின் புலத்திலேயே மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்றது. இதற்கு மலையக மக்கள் முன்னணி நடத்திய சில போராட்டங்கள் சான்றாக அமைகின்றன. மலையக மக்கள் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் 90களில் இந்தியா செல்வதில் அக்கறையை குறைத்துக்கொண்டனர். ஒப்பந்தம் செய்து ஒரு தசாப்தம் கடந்த நிலையில் அவர்கள்; இந்தியா செல்வதை விரும்பவில்லை. இந்த விருப்பத்திற்கு மாறான நாடு கடத்தலையும்¸ முழுமையாக தீர்க்கப்படாத பிரஜா உரிமை பிரச்சினைக்கும் எதிர்ப்பு காட்டும் வகையிலேயே¸ 1990ம் ஆண்டு தலவாக்கலையில் இந்திய பாஸ்போர்ட்டுகளை எரித்து மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனும் அதன் முன்னணி உறுப்பினர்களும் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டது.
வடகிழக்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் காரணமாக¸ மலையகத்திலும் இதற்கெதிரான போராட்டமும்¸ வடகிழக்கு பிரச்சினைக்கு மலையக மக்கள் மத்தியில் ஆதரவும்¸ கரிசனையும் ஏற்பட்டது. இதன் ஒரு எதிரொலியாகவே 1986ம் ஆண்டு தலவாக்கலையில் ஆரம்பிக்கப்பட்ட¸ “1986ம் ஆண்டு கலவரம்” நுவரெலியா மாவட்டம் எங்கும் பரவியது. இதன் விளைவாக நுவரெலியா மாவட்டத்தில் முதன் முதல் சிங்கள மக்கள் அகதிகளாயினர். இந்த போராட்டங்களில் மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்த பலரும் முன்நிலை வகித்தனர். எனவே வடகிழக்கு இயக்கங்களின் பாதிப்பும்¸ மலையக மக்கள் முன்னணியின் தோற்றத்திற்கு ஒரு காரணமாகியது.
இக்காலகட்டத்தில் பச்சைப்புலி பயங்கரவாதம் தலைதூக்கியதால் அரசியல் கட்சி¸ தொழிற்சங்கங்களை தோற்றுவிப்பது சிரமமாக இருந்த போதிலும்¸ மலையக மக்கள் முன்னணி தோற்றத்திற்கு இது உந்து சக்தியாக அமைந்தது. இக்காலப்பகுதியில் மலையகத்தில் இயங்கிய அரசியல்¸ தொழிற்சங்க அமைப்பு என்ற அடிப்படையில்¸ இலங்கை தொழிலாளர் காங்கிரசே ஆதிக்கம் செலுத்தியது. அந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஒரு இளம் செயற்பாட்டாளராக விளங்கிய பெ.சந்திரசேகரன் இ.தொ.காவுக்கு மாற்றாக மலையகத்தில் ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களோடு இணைந்து இ.தொ.காவுக்கு மாற்று சக்தியாக மலையக மக்கள் முன்னணியை தோற்றுவித்தார். மலையக மக்கள் முன்னணி இலங்கை தொழிலாளர் காங்கிரசின்; சண்டித் தனத்திற்கும்¸ அதன் குண்டர்களுக்கும் எதிர்த்து முகம் கொடுக்ககூடிய நிலையிலிருந்ததால்¸ அந்த எதிர்ப்பையும் வென்று மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்றது. ஆகவே ம.ம.மு என்பது பத்தோடு¸ பதினொன்றாக தோற்றம் பெற்றதல்ல. மாறாக அன்று நிலவிய சமூக¸ பொருளாதார அரசியல்¸ மற்றும் மலையக மக்களின் தேவையை முன்னிருத்தி தோற்றம் பெற்ற ஒரு அரசியல் கட்சியாகும். 20.02.1989 ல் மலையக மக்கள் முன்னணியும்¸ மலையக தொழிலாளர் முன்னணியும்¸ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இக்கட்சியின் ஸ்தாப தலைவராக திரு.சந்திரசேகரன் அவர்களும்¸ ஸ்தாபக செயலாளர் நாயகமாக திரு.பி.ஏ காதர் அவர்களும் நியமனம் பெற்றனர். அதன் பின்னர் இவ்விரண்டு அமைப்புக்களும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டன. அரசியல் சட்டத்திட்டத்திற்கு அமைய மலையக மக்கள் முன்னணி¸ இலங்கை தேர்தல் திணைக்களத்திலும்¸ தொழிற்சங்க சட்டத்திட்டத்திற்கு அமைய மலையக தொழிலாளர் முன்னணி¸ இலங்கை தொழில் திணைக்களத்திலும் முறையாக பதிவு செய்யப்பட்டன. இதன் ஸ்தாபக தலைவராக தெரிவுசெய்யப்பட்ட திரு.பெ.சந்திரசேகரன் அரசியல் கட்சி உத்தியோகபூர்வமாக அமைக்கப்படுவதற்கு முன்னரே 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில¸; நுவரெலியா மாவட்டத்தில் திரு.பெ.சந்திரசேகரன் போட்டியிட்டு 10500க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தன் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆதரவை வெகுவாக பெற்றிருந்ததை வெளிப்படுத்த முடிந்தது. அரசியல் கட்சியும்¸ தொழிற்சங்கமும் அமைக்கப்பட்டதன் பின்னர் இவ்விரு அமைப்புக்களும் அசுர வேகத்தில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. மிக நீண்ட தொழிற்சங்க வரலாற்றை கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் சவாலாக¸ மலையக தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சிக் காணப்பட்டது. அரசியல் கட்சி உருவாக்கப்பட்ட காலம் முதல்¸ நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் மேதின கூட்டங்களில்¸ மக்கள் இலங்கையில் இருக்கின்ற தேசிய கட்சிகளில் நடாத்தப்படுகின்ற கூட்டங்களில் திரள்வதை போல் இங்கும் திரண்டனர்.1989ம் ஆண்டு 1500 தொழிற்சங்க அங்கத்தினர்களோடு¸ ஆரம்பிக்கப்பட்ட மலையக தொழிலாளர் முன்னணி இரண்டு வருட காலத்தில்¸ கிட்டத்தட்ட 5000 அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளகூடியதாக இருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொழிற்சங்கம் மிக நீண்டகால அனுபவமிக்க தொழிற்சங்கங்களின் வளர்ச்சியை விட துரித வேகத்தில் வளர ஆரம்பித்தது. 03.07.1991ல் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தலைவர் பெ.சந்திரசேகரன்¸ செயலாளர் திரு.ப.அ.காதர்¸ உபதலைவர். வி.டி.தர்மலிங்கம் ஆகிய மூவரும் வேறு சில முன்னணி அங்கத்தவர்களும் கைது செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 3 வருடங்கள் 1994ம் ஆண்டுவரை சிறையில் தடுப்புக்காவலில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 1993ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில்¸ மத்திய மாகாணசபைக்கு மலையக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் பெ.சந்திரசேகரன் போட்டியிட்டார். சிறையில் இருந்த நிலையிலேயே அவர் வெற்றிப்பெற முடிந்தது. 1994ம் ஆண்டு இவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படாத நிலையில் நிரபராதிகளாக நட்ட ஈட்டுடன் விடுதலை செய்யப்பட்டனர்;. முக்கிய உயர் மட்ட தலைவர்கள் மூவரும் சிறையில் இருந்த காலத்தில¸; தொழிற்சங்கத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் வீழ்ச்சி காணவில்லை. 1994ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில¸; மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட தலைவர் பெ.சந்திரசேகரன் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 1991ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் இலங்கையின் ஒரு பிரதானமான தேசிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் அளவு¸ மலையக மக்கள் முன்னணி மிக குறுகிய காலத்தில் தேசிய கட்சிகளிடம் செல்வாக்கு பெற்றிருந்தது. இந்த தேர்தலில் மலையக மக்கள் முன்னணி முதன் முதல் உள்ளுராட்சி தேர்தலில் நுவரெலியா பிரதேசசபை¸ அம்பகமூவ பிரதேசசபை¸ தலவாக்கலை நகரசபை ஆகிய உள்ளுராட்சி நிறுவனங்களில் முதல் முதன் மொத்தமாக ஒன்பது உறுப்பினர்களை பெற்றது. 2010ம் ஆண்டு ஆரம்பமும்¸ இறுதி பகுதியும் எமக்கு பாரிய பின்னடைவு ஆண்டாக தொடங்கிய போதும்¸ 2010 ஒக்டோபர் மாதம் 19ம் திகதி அப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்¸ மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக விளங்கிய வே.இராதாகிரு~;ணனின் வரவு 2010 ஆண்டு இறுதியில்¸ எம்மை ஆசுவாசப்படுத்தியது மட்டுமன்;றி¸ எம்மை அதள பாதாளத்திலிருந்து காப்பாற்றியது. எமது தலைவர்¸ செயலாளரின் இழப்பின் பின் அவரது புது வரவு¸ எமது கட்சியின் வழமையான நடவடிக்கைகளையும்¸ எமது முன்னைய தலைவர்களின் பாதையில் சேவையை தொடங்குவதற்கும் வழிவகுத்தது. 2010 ஜனவரி 1லிருந்து எமது தலைவரின் மறைவின் பின் எம்மால் உணரப்பட்ட¸ மக்கள் பிரதிநிதி ஒருவரின் தேவை அதாவது 1 பாராளுமன்ற உறுப்பினரின் தேவை¸ 19.10.2010ல் ஒரு முடிவுக்கு வந்தது. கட்சிக்கு உள்வாங்குவதில் பல விமர்சனங்களும். தடைகளும் எதிர்ப்புக்களும் காணப்பட்ட அதே நேரத்தில்¸ பெரும்பான்மையோர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை நன்குனர்ந்திருந்தனர். ஆகவே அவரது வரவு மலையக மக்கள் முன்னணியின் வரலாற்றில¸; அதுவும் இவ்விதமான இக்கட்டான நேரத்தில்¸ உதவி கரம் கொடுத்தமை¸ ஒரு மைல் கல்லாக அமைந்தது. எமது தொழிற்சங்க¸ கட்சி நிலைமைகளில் சடுதியான மாற்றத்தை கொண்டு வந்தது. 2010ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 4 வருடங்கள் கட்சியின் செயல்பாட்டில் ஒரு சுமுகமான நிலையில் பயணிக்க கூடியதாக அமைந்தது.
திரு.வே.இராதாகிருஸ்ணனின் வருகைக்கு மலையக மக்கள் முன்னணி என்றென்றும் கடமைப்பட்டும்¸ நன்றியுடையதாகவும் இருக்க வேண்டும். இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு¸ மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தன்னை மாற்றிக்கொண்ட தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரும்¸ மலையக மக்கள் முன்னணி¸ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கும் இராதாகிரு~;ணன் அவர்களுக்கு மலையக மக்கள் முன்னணி நன்றியுடயதாக இருக்க வேண்டும். 2009-12-19ம் திகதி மலையக மக்கள் முன்னணி தலைவராக இருந்த சந்திரசேகரன்¸ அவர்களின் தலைமையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில்¸ எடுக்கப்பட்ட தீர்மானத்தில்¸ தேர்தலில் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்¸ பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவளிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் எம் சார்பில் போட்டியிட்ட அப்போதைய தலைவர் சாந்தினி சந்திரசேகரன் அவர்கள் தோல்வியுற்றார். இதற்கடுத்ததாக நடைபெற்ற 2011 உள்ளுராட்சி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியும்¸ தொழிலாளர் தேசிய சங்கமும் ஒன்றிணைந்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு¸ மலையக மக்கள் முன்னணி ஏழு உறுப்பினர்களையும்¸ தொழிலாளர் தேசிய சங்கம் நான்கு உறுப்பினர்களையும்¸ பெற்று ஜக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் என்.சதாசிவன் தலைமையில்¸ நுவரெலியா பிரதேசசபையில் மலையக மக்கள் முன்னணி ஆட்சி அமைத்தது. இது பாராளுமன்ற தேர்தல் தோல்வியை ஈடு செய்வதாக அமைந்தது. இந்த மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்க கூட்டுத்தான்¸ பிறகு தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிமாற்றம் பெற்றது. இந்த தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தலைவர் திருமதி சாந்தினி சந்திரசேகன்¸ அரசியற்துறைத்தலைவர் திரு.இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று நுவரெலியா பிரதேசசபையை கைபற்றியது¸ 2013ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில்¸ மலையக மக்கள் முன்னணி தனது சொந்த சின்னமான மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு¸ மத்திய மாகாணசபையில்; திரு.இராஜாராம் அவர்களை மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்;. இது முன்னைய மாகாணசபைத் தேர்தலில்¸ இழந்த இரண்டு மாகாணசபை உறுப்பினர்களின் இழப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். இது உள்ளுராட்சி தேர்தலிலும்¸ அடுத்து நடந்த மாகாணசபைத் தேர்தலிலும்¸ உறுப்பினர்களை வென்று மலையக மக்கள் முன்னணி மீண்டும்¸ அரசியல்துறைத்தலைவர் இராதாகிரு~;ணன் தலைமையில் நிலைநிறுத்திக்கொண்டது. அடுத்து நாட்டில் 2010லிருந்து நிலவிய மிக மோசமான மஹந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான¸ மைத்திரிபால ஸ்ரீசேன தலைமையில்¸ நடைபெற்ற நல்லாட்சிக்கான ஜனாதிபதி தேர்தலாகும். இதில் ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணி மகிந்தவை ஆதரிக்கும் தீர்மானத்திலிருந்து¸ அன்றைய சு10ழலை கருத்தில் கொண்டு¸ மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலில்¸ ஒரு வரலாற்று முக்கியத்துவமான நிலைப்பாட்டை எடுத்து¸ மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவுக்கட்டி மைதிரியின் ஆட்சிக்கு வழிகோலியது. இந்த முக்கியத்துவம் பொருந்திய தேர்தலில் மலையக மக்கள் முன்னணியினதும்¸ இக்கால பகுதியில் செயலாளராக கடமையாற்றிய எனது பங்கும் பலத்தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில்¸ மலையக மக்கள் முன்னணி¸ ஜனநாயக மக்கள் முன்னணி¸ தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் திரு.இராதாகிரு~;ணன்¸ திரு.மனோகனேசன்¸ திரு.திகாம்பரம் ஆகியோர் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில்¸ நுவரெலியா பதுளை¸ கண்டி. கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று கூட்டணி சாதனை படைத்தது. மலையக மக்கள் முன்னணி நுவரெலியாவிலும்¸ பதுளையிலும் தலா ஒவ்வொரு உறுப்பினர்களை பெற்றது. நுவரெலியாவில் தலைவர் இராதாகி~;ஸ்ணன் 87000 வாக்குகளை பெற்ற அதே நேரத்தில்¸ பதுளையில் அ.அரவிந்தகுமார் அவர்கள் 55000 வாக்குகளை பெற்று முதன் முதலாக¸ மலையக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே தெரிவானார். இவ்விதம் மலையக மக்கள் முன்னணி தலைவர் இராதாகிரு~;ணன் வருகையின் பின் அவர் தலைமையில்¸ ஒரு கட்சி என்ற அடிப்படையில் பலம் பெற்று முன்னேறியது.
Spread the love