408
நைஜீரியாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 103 பேர் உயிாிழந்துள்ளனா். நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனா்த்தம் ஏற்பட்டுள்ளது.
அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்ததாகவும் இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் உயிாிழந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. . அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளதுடன் மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.
Spread the love