525
வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில் இருந்து பூஜை வழிபாடுகளுடன் கொடிசீலை , நாக பாம்பு வாகனத்தில், ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு , ஆலயத்தில் தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மதியம் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலயத்தில் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 1ஆம் திகதி இரவு சப்பர திருவிழாவும் , 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , மறுநாள் 03ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மகோற்சவ காலத்தில் ஆலயத்துக்கு வருகை தரவுள்ள பக்தர்களுக்காக தரை மற்றும் கடல் போக்குவரத்து வசதிகள் , தாக சாந்தி நிலையங்கள் , அன்னதானம் என அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஆலய சூழலில் தற்காலிக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு , சீருடை மற்றும் சிவில் உடையில் பெருமளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love